நடிகர் பிரபுவுக்கு ஸ்பெஷல் மெசேஜ் அனுப்பிய குஷ்பு!

  • IndiaGlitz, [Sunday,December 27 2020]

கடந்த 90களில் பிரபு மற்றும் குஷ்பு ஆகியோர் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்த நிலையில் இன்று பிரபுவுக்கு ஸ்பெஷல் மெஸேஜ் ஒன்றை குஷ்பு அனுப்பி உள்ளார்

நடிகர் பிரபு சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரை உலக பிரமுகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் குஷ்புவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரபுவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஒரு அற்புதமான சக நடிகர், எனது வாழ்க்கையில் முக்கிய நண்பரான பிரபு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் கடவுளின் ஆசிர்வாதத்துடன் அவர் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன்’ என்று குஷ்பு தனது மெசேஜில் குறிப்பிட்டுள்ளார்

பிரபு, குஷ்பூ இணைந்து நடித்த ’சின்னத்தம்பி’ உள்பட பல திரைப்படங்கள் வெள்ளிவிழா திரைப்படங்கள் என்பது அனைவரும் அறிந்ததே