பிரபு வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த குஷ்பு: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Sunday,March 21 2021]

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, நடைபெறவிருக்கும் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் சமீபத்தில் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதன் முதலாக தேர்தல் களத்தில் குதித்திருக்கும் குஷ்புவுக்கு அந்த தொகுதி மக்கள் வெற்றிக்கனியை கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

இந்த நிலையில் நடிகை குஷ்பு திடீரென மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டுக்கு விசிட் அடித்துள்ளார். சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் கணேசன் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நிலையில் அவருக்கு தனது வாழ்த்து தெரிவித்துவிட்டு தான் வெற்றி பெற ஆசி பெறவும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பிரபு, ராம்குமார் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் அனைவரிடமும் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். குறிப்பாக சிவாஜிகணேசனின் படத்தின் முன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூர்யாவுடன் பிதாமகன் படப்பிடிப்பு: மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட லைலா!

தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் 'பிதாமகன்'. இந்த திரைப்படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக லைலா நடித்திருந்தார் என்பது தெரிந்ததே 

சோம், ரியோவுடன் ஆட்டம் போட்ட சம்யுக்தா: வைரல் வீடியோ

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இருக்கின்றனர் என்பதும் ஒவ்வொரு போட்டியாளரின் இன்ப துன்பங்கள் நிகழ்ச்சிகளில்

குக் வித் கோமாளி: இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இருவர், எலிமினேட் ஆனவர் யார் யார்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது 

மாலத்தீவும் பிக்பாஸ் ஷிவானியும்... வைரலாகும் நீச்சல்குள புகைப்படம்!

இன்ஸ்டாகிராமில் மில்லியன்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளவர்களுக்கு மாலத்தீவு சென்றுவர இலவச விமான கட்டணம் மற்றும் தங்கும் வசதி, உணவு வசதி ஆகியவற்றை அந்நாட்டின் சுற்றுலாத் துறை

லண்டனில் இருக்கும் வனிதாவின் சகோதரி மகன்: அச்சு அசலாக விஜய்குமார் போல் இருக்கும் ஆச்சரியம்!

லண்டனில் இருக்கும் வனிதா விஜயகுமாரின் சகோதரி மகன் அச்சு அசலாக அவருடைய தாத்தா விஜயகுமார் போலவே இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது