பிரபு வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த குஷ்பு: வைரல் புகைப்படங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, நடைபெறவிருக்கும் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் சமீபத்தில் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதன் முதலாக தேர்தல் களத்தில் குதித்திருக்கும் குஷ்புவுக்கு அந்த தொகுதி மக்கள் வெற்றிக்கனியை கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
இந்த நிலையில் நடிகை குஷ்பு திடீரென மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டுக்கு விசிட் அடித்துள்ளார். சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் கணேசன் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நிலையில் அவருக்கு தனது வாழ்த்து தெரிவித்துவிட்டு தான் வெற்றி பெற ஆசி பெறவும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் பிரபு, ராம்குமார் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் அனைவரிடமும் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். குறிப்பாக சிவாஜிகணேசனின் படத்தின் முன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Paid visit to #NadigarThilgham #ChevalierSivajiGanesan avl home and met his family. Shri.RamKumar Ganesan avl has joined the @BJP4India recently.
— KhushbuSundar ❤️ (@khushsundar) March 21, 2021
So welcoming and such warm hospitality. As always. Thank you so much.?????? pic.twitter.com/lOSZUSJjmi
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments