'அரண்மனை 3' படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட குஷ்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா உள்பட பலர் நடித்த ’அரண்மனை 3’ திரைப்படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’அரண்மனை 3’ படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு ஒரு முக்கிய அப்டேட்டை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதன்படி ’அரண்மனை 3’ திரைப்படத்தின் டிரைலர் வரும் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் டிரைலரை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
’அரண்மனை 3’ திரைப்படத்தில் சுந்தர் சி, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு, கோவை சரளா, மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். சி சத்யா இசையில், செந்தில்குமார் ஒளிப்பதிவில் ,உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை குஷ்பு மற்றும் சுந்தர் சி யின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Set a reminder, the day you have been waiting for has arrived. #Aranmanai3 trailer drops on 30th of Sep at 5pm.??#SundarC @RedGiantMovies_@Udhaystalin @arya_offl @CSathyaOfficial @RaashiiKhanna_ @uksrr @FennyOliver @iyogibabu @saregamasouth @RIAZtheboss @teamaimpr @CtcMediaboy pic.twitter.com/eXHiZsho57
— KhushbuSundar (@khushsundar) September 28, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments