'மாஸ்டர்' படம் பார்த்து குஷ்பு கூறியது என்ன தெரியுமா? வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Saturday,January 16 2021]

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13ஆம் தேதி தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வெளியானது என்பதும், இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சியே பல திரையுலக பிரமுகர்கள் பார்த்து தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்தநிலையில் தளபதியின் 'மாஸ்டர்’ திரைப்படத்தை தற்போது திரையரங்குகளில் பார்த்த நடிகை குஷ்பு தனது கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 10 மாதங்களுக்குப் பின்னர் திரையரங்கில் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது என்றும், தளபதி விஜய்யின் 'மாஸ்டர்’ என்ற ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படத்தை பார்ப்பதைவிட திரையுலகில் ஒரு மறு பயணத்திற்கான தொடக்கம் வேறு எதுவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் திரையரங்கில் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய் சேதுபதி அவர்களுக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் குஷ்பு தனது டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார். 'மாஸ்டர்’ திரைப்படம் குறித்து நடிகை குஷ்பு பதிவு செய்துள்ள இந்த டுவிட் விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.