அமித்ஷா குணமாக குஷ்பு டுவீட்: பரபரப்பு தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அமித்ஷா விரைவில் குணமாக வேண்டும் என்று பாஜக மாநில முதல்வர்களும், பாஜக தலைவர்களும் தொண்டர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்
இந்த நிலையில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் அமித்ஷா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என்று ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமித்ஷா குணமடைய பிரார்த்திப்பதாக குஷ்பு பதிவு டுவீட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஏற்கனவே மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு தமிழக காங்கிரஸில் உள்ள தலைவர்கள் ஒருசிலர் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இதனால் குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேரப்போவதாக வதந்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் அமித்ஷா விரைவில் கொரோனாவில் இருந்து குணமடைய இறைவனை வேண்டுவதாக டுவீட் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் அவர் இந்த டுவிட்டை பதிவு செய்திருப்பதாகவும், இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்
Wishing our Union Home Minister @AmitShah ji a very speedy recovery. Get well soon. Prayers for your recovery. ??????
— KhushbuSundar ❤️ (@khushsundar) August 2, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments