ஏன் இவ்வளவு சத்தம்? ரஜினி பேட்டி குறித்து குஷ்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை மும்பையில் நடைபெறவுள்ள 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்த தேர்தலில் தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்றும், வரும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது எனக்கு தெரியாது, ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி நதிகளை இணைக்க முயற்சிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ரஜினியின் இந்த பேட்டியை வைத்து அவர் பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துவிட்டதாக சமூக வலைத்தள பயனாளிகளும், ஒருசில ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் இந்த பேட்டி குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, 'ரஜினி அவர்கள் கூறியதை வைத்து ஊடகங்கள் ஏன் இவ்வளவு சப்தம் செய்கின்றன என்பது ஆச்சரியமாக உள்ளது. நதிகள் இணைப்பு குறித்து ஒரு குடிமகனாக தனது கருத்தை சொல்ல அவருக்கு உரிமை இல்லையா? இதை ஏன் அரசியலாக்க வேண்டும்? என்று கூறியுள்ளார்.

More News

கமல் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது குறித்து ரஜினிகாந்த் விளக்கம்

கடந்த இரண்டு நாட்களாக ரஜினியின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், ரஜினி ஆதரவு தருவேன் என்று கூறியிருப்பதாகவும், அவர் ஆதரவு தருவார் என்று நம்புவதாகவும்

ரஜினிகாந்த்-கே.எஸ்.ரவிகுமார் திடீர் சந்திப்பு! அடுத்த பட திட்டமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ? வருடத்திற்கு இரண்டு படங்கள் தனது ரசிகர்களுக்கு கொடுக்க முடிவு செய்துவிட்டார் போல் தெரிகிறது.

நாங்க யார்கிட்டயும் காசு வாங்கவில்லை: அய்யாக்கண்ணு பேட்டி

கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜகவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் நிர்வாண போராட்டம் உள்பட பல்வேறு நூதனப்போராட்டம் நடத்திய விவசாயி சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு

ஆர்.கே.நகர் ரிலீஸ் தள்ளி வைப்பு! அரசியல் அழுத்தம் காரணமா?

வெங்கட்பிரபுவின் பிளாக்டிக்கெட் கம்பெனி தயாரித்த 'ஆர்.கே.நகர் திரைப்படம் வரும் 12ஆம் தேதி ரிலீஸாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தபோது,

நான் கூட சிவப்பு சிந்தனையாளர்ன்னு நினைச்சேன்: கரு.பழனியப்பனை கலாய்த்த கஸ்தூரி

இயக்குனர் கரு.பழனியப்பன் கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தாலும் அவரது விமர்சனத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து கட்சி அரசியல்வாதிகளும் ஆளாகினர்.