நீங்கள் எங்கள் விலைமதிப்பற்ற ரத்தினம்: ரஜினி குறித்து குஷ்பு டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வர மாட்டார் என்றும் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றும் இருவேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் மாறி மாறி பதிவு செய்யப்படுகிறது.
குறிப்பாக நேற்றைய ரஜினியின் டுவீட்டுக்கு பின்னர் அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்றும் அவர் உடல்நிலை நன்றாக இருந்தாலே போதும், அவர் அரசியலுக்கு வரத் தேவையில்லை என்றும் அவரது ரசிகர்களே தற்போது தங்களுடைய கருத்துக்களை மாற்றிக் கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினியின் அரசியல் முடிவு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அரசியல் விமர்சகர்களும் கருத்து கூறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இதுகுறித்து பாஜக பிரபலம் நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் கருத்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது.
உங்களுடைய நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் விட வேறு எதுவும் முக்கியமில்லை. நீங்கள் எங்கள் விலைமதிப்பற்ற ரத்தினம். நீங்கள் எங்கள் புதையல். தயவுசெய்து உங்களுக்கு சிறந்தது எதுவோ அதை செய்யுங்கள். நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பு எதுவும் மாறாது’ என்று கூறியுள்ளார்.
Dear @rajinikanth Sir. Nothing is more important than your good health and happiness. You are our precious gem. You are our treasure. Pls do what you is best for you, health wise and otherwise. Nothing will change our love for you. We will continue to idolize you all our lives ❤
— KhushbuSundar ❤️ (@khushsundar) October 30, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments