ஒரு பெண் எப்படி வாழ்கிறாள் என்று யாரும் பேசக்கூடாது: நயன்தாரா விவகாரம் குறித்து குஷ்பு

  • IndiaGlitz, [Monday,March 25 2019]

'கொலையுதிர்க்காலம்' சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டிக்காத திரையுலகினர்களே இல்லை எனலாம். இதுகுறித்து ராதாரவி வருத்தம் தெரிவித்தும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி வருகிறது

இந்த நிலையில் நயன்தாரா விவகாரம் குறித்து நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறியபோது, 'தங்கள் அகம்பாவத்தை ஊக்கப்படுத்திக்கொள்ள ஆண்கள் எளிதில் கையாளும் வழி, ஒரு பெண்ணை இழிவுபடுத்துவது அல்லது அவளது குணத்தைக் கொச்சைப்படுத்துவது. ஒரு பெண் எப்படி வாழ்கிறாள், என்ன செய்கிறாள் என்பதைப் பற்றியெல்லாம் யாரும் பேசக்கூடாது. நயன் அகத்திலும் புறத்திலும் அழகானவர். அவரை அவமானப்படுத்துபவரும், அதைக் கைதட்டி ரசித்தவர்களும் திரைத்துறைக்கே அவமானச் சின்னங்கள்' என்று தனது சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குஷ்புவின் இந்த கருத்தை பெரும்பாலான நெட்டிசன்கள் வரவேற்றுள்ள்னார்.