போய் வேலை இருந்தா பாருங்க: குஷ்பு கூறியது யாரை?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது என்பதும் நேற்று பதிவான வாக்குகள் வரும் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்பட்டு அன்று இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட திரையுலக பிரபலங்களில் ஒருவர் நடிகை குஷ்பு என்பதும் அவர் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார் என்பது தெரிந்ததே. குஷ்பு ஆயிரம்விளக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்தபோது நல்ல வரவேற்பு இருந்ததால் அவர் கண்டிப்பாக அந்த தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏவாக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் சற்று முன்பு குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ’போய் வேலை இருந்தா பாருங்க’ என்று டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தேர்தல் முடிந்து விட்டன, ஆனால் தோல்வி பயத்தால் திமுகவினர் சிலர் சித்த பிரமை பிடித்தவர்கள் இன்னும் சத்தம் போட்டுக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றேன். போய் வேலை இருந்தா பாருங்க. ஒரு பெண்ணை மதிக்காத கட்சியின் பேச்சு எப்படி இருக்கும்? அது தமிழ் மக்களுக்கு தெரியும்’ என்று பதிவு செய்துள்ளார். குஷ்புவின் இந்த ட்விட்டிற்கு என்ன காரணம் என நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர்.
Elections are over but I see bunch of paranoid DMK losers still ranting. போய் வேளை இருந்தா பாருங்க. ஒரு பெண்ணை மதிக்காதது கட்சியின் பெச்சு எப்படி இருக்கும் அது தமிழ் மக்களுக்கே தெரியும். ????
— KhushbuSundar ❤️ (@khushsundar) April 7, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments