தமிழ் பண்டிட் எச்.ராஜா மொழி பெயர்த்தாரா? குஷ்பு கிண்டல்
- IndiaGlitz, [Friday,November 02 2018]
பாரத பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன் தினம் குஜராத் மாநிலத்தில் உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை திறந்து வைத்தார். ரூ.3000 கோடியில் அமைக்கப்பட்ட இந்த சிலை குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பதிவாகி வருகிறது.
ஸ்டாட்சூ ஆஃப் யூனிட்டி என்ற பெயரில் இந்த சிலை திறப்பு விழா நடந்த நிலையில் இதன் தமிழ் மொழியாக்கம் தவறாக 'ஸ்டேட்டுக்கு ஓப்பி யூனிட்டி' என கூகுள் மொழி பெயர்ப்பின்படி தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை இந்த திறப்பு விழாவுக்கு சென்ற தமிழக அமைச்சர்களும் உறுதி செய்தனர். இதனையடுத்து தமிழ் பெயர் மட்டும் அழிக்கப்பட்டது.
இந்த நிலையில் குஷ்பு இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்துள்ளார். ஒருவேளை இந்த மொழிபெயர்ப்பை தமிழ் பண்டிட் எச்.ராஜா மொழி பெயர்த்தாரா? என்று கிண்டலுடன் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வந்திருந்தபோது அவரது பேச்சை மொழி பெயர்த்த எச்.ராஜா, நுண்நீர் பாசனம் என்பதற்கு பதிலாக சிறுநீர் பாசனம் என மொழிபெயர்த்ததையே குஷ்பு மறைமுக சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது.
What was the central govt thinking while making this?? Can't you guys even get the translation right??? Or is it that @AmitShah had asked your Tamil pundit #HRaja to do the translation??? ???????????????????????????????????????????????????????????? pic.twitter.com/K4gNHDL5tn
— khushbusundar..and it's NAKHAT KHAN for the BJP.. (@khushsundar) November 1, 2018