நடிகை குஷ்பு எடுத்த திடீர் முடிவு.. ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை குஷ்பு எடுத்த திடீர் முடிவு காரணமாக அவரது ரசிகர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு அவ்வப்போது சினிமா மற்றும் அரசியல் கருத்துக்களை பகிர்ந்து வருவார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகை குஷ்பு உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில் சிறிது காலம் சமூக வலைதளத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த பதிவில் ’நண்பர்களுக்கு வணக்கம். எனக்கு கொஞ்சம் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் ரேடாரில் இருந்து விலகுகிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் பார்க்கிறேன். அதுவரை கவனமாக இருங்கள், நன்றாக இருங்கள், பாசிட்டிவாக இருங்கள், அனைவரையும் நேசிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
குஷ்பு விரைவில் நலம் பெற்று மீண்டும் சமூக வலைதளத்திற்கு ஆக்டிவாக திரும்ப ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Hi friends.. I need some detoxification. Going off the radar. Will connect soon. Till then, take care, be good, stay positive. Love you all. ❤️
— KhushbuSundar (@khushsundar) July 30, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com