'டேய் லூசுத்தம்பி': சீண்டிய நெட்டிசனை வெளுத்து வாங்கிய குஷ்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த குஷ்புவை காங்கிரஸ் கட்சியினரும் நெட்டிசன்களும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும், அவ்வப்போது தன்னை நேரடியாக சீண்டி விமர்சனம் செய்பவர்களுக்கு குஷ்பு பதிலடி கொடுத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் சமீபத்தில் டுவிட்டர் பயனாளி ஒருவர் ’காங்கிரசில் இருக்கும் போது தேர்தல் பிரச்சாரத்துக்கு காசு கேட்ட மாதிரி, பிஜேபியிலும் வேல் யாத்திரைக்கு காசு கேட்டிங்களாமே உண்மையா குஷ்பு? என்று கேள்வி எழுப்பியதோடு, ‘முருகனும் மத்த சீனியர்களும் உங்க மேல செம்ம காண்டுல இருக்காங்களாமே. அடுத்த கட்சி ஆபிஸ் போக பெட்டியை ரெடி பண்ணிட்டிங்களா? என்று கிண்டலுடன் கேட்டுள்ளார்.
நெட்டிசனின் இந்த கேள்விக்கு பதிலடி கொடுத்த குஷ்பு, ‘டேய் லூசுத் தம்பி. நான் பணம் வாங்கினேனா என ராகுல்காந்தியிடம் போய் கேள். 6 வருடங்களுக்கு ஒரு முறைதான் தேர்தல் வருகிறாது. காங்கிரஸ் எப்போது எனக்கு பணம் கொடுத்த்து? என்னை பணத்தால் வாங்க முடியுமா? என விளாசியுள்ளார். குஷ்புவின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது
Dai loosu thambi, have been to every election campaign when in @INCIndia for 6yrs. From the length n breadth of the nation. Pls go and ask @RahulGandhi if he paid me or you think everyone is like you, can be bought by money?? Do not prove Congress trolls are dumb too. ?????? https://t.co/h45t4oWBhf
— KhushbuSundar ❤️ (@khushsundar) November 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com