திருமணம் செய்யலாமா? என்று கேட்ட ரசிகருக்கு குஷ்புவின் ஷாக்கிங் பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உங்களை திருமணம் செய்யலாமா என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு குஷ்புவின் ஷாக்கிங் பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
நடிகை குஷ்பு நேற்று பதிவு செய்த புகைப்படங்களை பார்த்த திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். முதன்முதலாக நடிக்க வந்தபோது எப்படி இருந்தாரோ அதேபோல் ஸ்லிம்மாக குஷ்பு மாறி இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. திரையுலக பிரபலங்கள் குஷ்புவின் இந்த மாற்றத்தை கண்டு ஆச்சரியத்துடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் தங்கள் பங்குக்கு குஷ்புவுக்கு தங்கள் வாழ்த்துக்களை வருகின்றனர்
இந்த நிலையில் குறும்புக்கார ரசிகர் ஒருவர் நீங்கள் இப்போது இருக்கும் தோற்றத்தைப் பார்க்கும் போது உங்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது. உங்களுக்கு சம்மதமா? என கேட்க அதற்கு குஷ்பு, ‘நீங்கள் 21 வருடம் தாமதமாக இந்த கேள்வியை என்னிடம் கேட்டு உள்ளீர்கள். ஆனாலும் கவலைப்பட வேண்டாம், எனது கணவரிடம் ஒரு வார்த்தை இதைப் பற்றி பேசிவிட்டு பதில் சொல்கிறேன்’ என்று கமென்ட் போட்டு கேள்வி கேட்டவரையே ஷாக் அடைய செய்துள்ளார். குஷ்புவின் இந்த பதில் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை குஷ்பு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Oh oh.. sorry you are late. A little over 21 yrs late to be precise. But let me check with my husband anyways. ???????????? https://t.co/Naf3ixoaF8
— KhushbuSundar (@khushsundar) August 22, 2021
Unfortunately I am his only wife.. so he says sorry. Not ready to give up. ???????????? https://t.co/8oSNbI7oPL
— KhushbuSundar (@khushsundar) August 22, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout