மன்சூர் அலிகான் விஷயத்தை அவ்வளவு எளிதில் விட முடியாது: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை எளிதில் விட்டுவிட முடியாது என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
ஒரு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நான் ஏற்கெனவே மன்சூர் அலிகான் விவகாரத்தை எனது சீனியர் உறுப்பினர்களிடம் கூறியுள்ளேன். நிச்சயம் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்படிப்பட்ட அசுத்தமான மனம் கொண்டவரை அவ்வளவு எளிதில் விட்டுவிட முடியாது. த்ரிஷாவுக்கு நான் துணையாக நிற்கிறேன். நான் உள்பட என் சக நடிகைகள் பற்றி இந்த மனிதன் மிகவும் ஆபாசமாக தரக்குறைவான முறையில் பேசுகிறார். பெண்களைப் பாதுகாக்க நாம் அயராமல் இப்படி போராடும்போது, இத்தகைய ஆண்கள் நம் சமூகத்தில் ஒரு ரோபோ போல் செயல்படுகின்றனர்" எனத் தெரிவித்துள்ளார்.
As a member of NCW, I have already taken up the issue of Mansoor Ali khan with my senior and will be taking an action on it. Nobody can get away with such a filthy mind. I stand with @trishtrashers and my other colleagues where this man speaks in such a sexist disgusting mindset…
— KhushbuSundar (@khushsundar) November 19, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com