மன்சூர் அலிகான் விஷயத்தை அவ்வளவு எளிதில் விட முடியாது:  தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு

  • IndiaGlitz, [Sunday,November 19 2023]

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை எளிதில் விட்டுவிட முடியாது என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

ஒரு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நான் ஏற்கெனவே மன்சூர் அலிகான் விவகாரத்தை எனது சீனியர் உறுப்பினர்களிடம் கூறியுள்ளேன். நிச்சயம் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்படிப்பட்ட அசுத்தமான மனம் கொண்டவரை அவ்வளவு எளிதில் விட்டுவிட முடியாது. த்ரிஷாவுக்கு நான் துணையாக நிற்கிறேன். நான் உள்பட என் சக நடிகைகள் பற்றி இந்த மனிதன் மிகவும் ஆபாசமாக தரக்குறைவான முறையில் பேசுகிறார். பெண்களைப் பாதுகாக்க நாம் அயராமல் இப்படி போராடும்போது, ​​​​இத்தகைய ஆண்கள் நம் சமூகத்தில் ஒரு ரோபோ போல் செயல்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

More News

காக்கா - கழுகு குறித்து 'நச்' கருத்து பேசிய லெஜண்ட் சரவணன்...!

 கடந்த சில வாரங்களாக காக்கா கழுகு கதை  சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து லெஜன்ட் சரவணன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மன்சூர் அலிகானுக்கு நடிகர் சங்கம் கண்டனம்..!

த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம் ஊடகங்கள் முன்பு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து தென்னிந்திய நடிகர்

எனக்கு புரியவே இல்லை, பிளாக் ஆவுது.. பூர்ணிமா பிளாக்கை நான் எடுத்து விடட்டுமா? கமல்ஹாசன்..!

என்னை பற்றி பார்வையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை, எனக்கு  கேமே புரியவில்லை என்று கூறிய பூர்ணிமா, எனக்கு ப்ளாக் ஆகுது,

'குட்நைட்' இயக்குனரின் அடுத்த படத்தில் இந்த மாஸ் ஹீரோவா? விரைவில் அறிவிப்பு..!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான 'குட்நைட்' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாக இருக்கும்

நீங்களாச்சு, பிக்பாஸ் ஆச்சு.. பிக்பாஸ் பிரதீப்பின் நக்கல் பதிவு..!

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட பிரதீப் தனது சமூக வலைத்தளத்தில் நீங்களாச்சு, பிக்பாஸ் ஆச்சு, என்னை ஆளை விடுங்கள் என்று நக்கலுடன் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி