தமிழ்நாடு- தமிழகம் எது கரெக்ட்? குஷ்பு விளக்கம்

  • IndiaGlitz, [Sunday,January 08 2023]

சமீபத்தில் தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைப்பதே சரியானதாக இருக்கும் என தமிழக ஆளுநர் ரவி அவர்கள் தெரிவித்ததற்கு அரசியல்வாதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி டுவிட்டரில் இந்திய அளவில் தமிழ்நாடு என்ற ஹேஸ்டேக் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இது குறித்த விவாதங்கள் அரசியல்வாதிகள் மத்தியில் எழுந்து வரும் நிலையில் நடிகை குஷ்புவிடம் சமீபத்தில் இந்த கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘தமிழ்நாடு, தமிழகம் என இரண்டுமே ஒன்றுதான், எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம், சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறு தமிழ்நாடு, தமிழகம் ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சோறு, சாதம் என இரண்டு வார்த்தைகளும் ஒன்றுதான், அவர்கள், சார் என எப்படி வேண்டுமானாலும் ஒருவரை அழைக்கலாம், அம்மையார், தாயார் என இரண்டுமே ஒரே அர்த்தம் தான். அதே போல் தமிழ்நாடு, தமிழகம் என்பது ஒன்றுதான் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் ’என்னைப்பொறுத்தவரை தமிழ்நாடு தான் எனக்கு சொந்த மாநிலம், என்னை தமிழச்சி என்று சொல்வதில் பெருமை பெற்றுக் கொள்வேன், என்னுடைய இரண்டு குழந்தைகளும் தமிழ்நாட்டில்தான் பிறந்தார்கள்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ’வாரிசு’, ‘துணிவு’ ஆகிய இரண்டு படங்களில் எந்த படத்தை முதலில் பார்ப்பீர்கள் என்ற கேள்விக்கு நான் இரண்டையுமே பார்க்க மாட்டேன், வீட்டில்தான் இருப்பேன். முதல் நாள் முதல் காட்சி எல்லாம் தீவிர ரசிகர்கள் தான் பார்ப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ’வாரிசு’ படத்தில் எந்த கேரக்டரில் நடித்து இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு ’என்னால் இப்போதைக்கு அதற்கான பதிலை சொல்ல முடியாது’ என்றும் அவர் தெரிவித்தார்.

More News

'சூர்யா 42' படத்தின் டைட்டில் இதுவா? இந்தியில் மட்டும் வேறு டைட்டிலா?

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.

அமெரிக்க பங்குச்சந்தையில் அஜித்தின் 'துணிவு': லைகாவின் அதிரடி அறிவிப்பு!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் வரும் 11ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இன்னும் மூன்றே நாட்களில் திரையரங்குகளில் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

பிறந்த நாள் கொண்டாடும் 'வாரிசு' ரஞ்சிதம் .. குவியும் ரசிகர்களின் வாழ்த்து!

தளபதி விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ரஞ்சிதமே' என்ற பாடலை விஜய்யுடன் பாடிய எம்எம் மானசி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

'வாரிசு' - 'துணிவு' : ரிலீசுக்கு முன் குவித்த கோடிகள் எவ்வளவு?

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 11-ம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களின் டிரைலர்கள் மிகப்பெரிய

'நான் பெரிய நடிகரா ஒப்புக்கொண்டது இந்த ரெண்டு பேரை மட்டும் தான்: சிவகுமார்

நான் பெரிய நடிகராக ஒப்புக் கொண்டது இந்த இரண்டு நடிகர்களை மட்டும் தான் என்றும் அந்த பட்டியலில் என்னுடைய பெயர் கூட இல்லை என்றும் பழம்பெரும் நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.