தமிழ்நாடு- தமிழகம் எது கரெக்ட்? குஷ்பு விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைப்பதே சரியானதாக இருக்கும் என தமிழக ஆளுநர் ரவி அவர்கள் தெரிவித்ததற்கு அரசியல்வாதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி டுவிட்டரில் இந்திய அளவில் தமிழ்நாடு என்ற ஹேஸ்டேக் வைரலானது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் இது குறித்த விவாதங்கள் அரசியல்வாதிகள் மத்தியில் எழுந்து வரும் நிலையில் நடிகை குஷ்புவிடம் சமீபத்தில் இந்த கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘தமிழ்நாடு, தமிழகம் என இரண்டுமே ஒன்றுதான், எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம், சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறு தமிழ்நாடு, தமிழகம் ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சோறு, சாதம் என இரண்டு வார்த்தைகளும் ஒன்றுதான், அவர்கள், சார் என எப்படி வேண்டுமானாலும் ஒருவரை அழைக்கலாம், அம்மையார், தாயார் என இரண்டுமே ஒரே அர்த்தம் தான். அதே போல் தமிழ்நாடு, தமிழகம் என்பது ஒன்றுதான் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் ’என்னைப்பொறுத்தவரை தமிழ்நாடு தான் எனக்கு சொந்த மாநிலம், என்னை தமிழச்சி என்று சொல்வதில் பெருமை பெற்றுக் கொள்வேன், என்னுடைய இரண்டு குழந்தைகளும் தமிழ்நாட்டில்தான் பிறந்தார்கள்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ’வாரிசு’, ‘துணிவு’ ஆகிய இரண்டு படங்களில் எந்த படத்தை முதலில் பார்ப்பீர்கள் என்ற கேள்விக்கு நான் இரண்டையுமே பார்க்க மாட்டேன், வீட்டில்தான் இருப்பேன். முதல் நாள் முதல் காட்சி எல்லாம் தீவிர ரசிகர்கள் தான் பார்ப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ’வாரிசு’ படத்தில் எந்த கேரக்டரில் நடித்து இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு ’என்னால் இப்போதைக்கு அதற்கான பதிலை சொல்ல முடியாது’ என்றும் அவர் தெரிவித்தார்.
பொங்கலுக்கு வாரிசா, துணிவா? குஷ்பு பளீச் பதில்! #Shorts#Khusbu #Varisu #Thunivu #VIjayVarisu #AjithThunivu #VarisuFDFS #ThunivuFDFS #VarisuThunivu #ThunivuVarisu #PongalRelease #துணிவு #வாரிசு #விஜய் #அஜித் pic.twitter.com/SH5qHYQjm0
— தினமணி (@DinamaniDaily) January 8, 2023
மும்பையில் பிறந்தாலும் தமிழ்நாட்டின் தமிழச்சி: ஆளுநர் கருத்துக்கு குஷ்பு விளக்கம்! #Shorts#Khushbu #BJP #TamilnaduBJP #Tamilnadu #RNRavi pic.twitter.com/vydIFLKdK1
— தினமணி (@DinamaniDaily) January 8, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout