கேரளாவில் பிரதமரை பாதுகாத்த பாதுகாவலர்கள்: குஷ்பு வெளியிட்ட வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளாவுக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்திருந்த போது அவர் மீது மலர்களை தூவிய போது மலருடன் சேர்ந்து ஒரு பொருளும் விழுந்ததை அடுத்து அதை பிரதமரின் பாதுகாவலர்கள் தகுந்த நேரத்தில் தடுத்து பாதுகாத்த வீடியோவை நடிகை குஷ்பு பகிர்ந்து உள்ளார்.
கேரள மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைப்பதற்காக வருகை தந்துள்ளார். கொச்சியில் வந்தே பாரத் ரயில் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க கேரளா வந்த போது அவரை வரவேற்ற பொதுமக்கள் அவர் மீது மலர்களை தூவினார். அப்போது மலர்களுடன் சேர்ந்து ஒரு பொருளும் வந்ததை அடுத்து அந்த பொருளை பாதுகாப்பு அதிகாரிகள் லாவகமாக தடுத்து அந்த பொருளை அப்புறப்படுத்தினர்.
இது குறித்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நடிகை குஷ்பு ’நாட்டின் பிரதமரை பாதுகாக்க தேவையான விரைவான நடவடிக்கைகள் எடுத்த அர்ப்பணிப்புள்ள பாதுகாப்பு குழுவினர்களுக்கு நன்றி' என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
The quick reflexes that is needed to protect the Pradhan sevak of the country @narendramodi ji!
— KhushbuSundar (@khushsundar) April 25, 2023
Dedicated team! 🙏🙏🙏 pic.twitter.com/CJS82K537Z
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments