என்னை திட்டவோ, அணைக்கவோ கமலுக்கு உரிமை உண்டு: நடிகை-அரசியல்வாதி பேட்டி

  • IndiaGlitz, [Thursday,December 24 2020]

கமல்ஹாசன் அவர்கள் என்னுடைய நெருங்கிய நண்பர், அவருக்கு என்னை திட்டவோ அணைக்கவோ உரிமை இருக்கிறது என சமீபத்தில் பேட்டியளித்த நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தெரிவித்துள்ளார்

திமுகவில் இருந்து காங்கிரஸ் அதன் பின்னர் காங்கிரஸிலிருந்து பாஜக என கட்சி மாறிய குஷ்பு சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ’வேளாண் மசோதா குறித்து குஷ்புவுக்கு சரியான புரிதல் இல்லை என்றும் டெல்லியில் போராடும் விவசாயிகள் சேற்றில் கால் வைத்தவர்கள் என்றும், டிராக்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்றும் கமல்ஹாசன் கூறியதாக செய்தியாளர்கள் கூறி இது குறித்து தங்களுடைய கருத்து என்ன? என்று கேள்வி கேட்டனர்

அதற்கு பதில் அளித்த நடிகை குஷ்பு ’கமல் சார் அவர்கள் என்னுடைய நெருங்கிய நண்பர். அவருக்கு என்னை திட்டவோ அணைக்கவோ முழு உரிமை உள்ளது. என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் கமல் கூற அவருக்கு உரிமை உண்டு’ என்று கூறினார் குஷ்புவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது