close
Choose your channels

கமல்ஹாசனை எதிர்த்து வானதி வெற்றி பெற்றது எனக்கு ரொம்ப சந்தோஷம்: குஷ்பு 

Thursday, August 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கமலஹாசனை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றது தனது ரொம்ப சந்தோசம் என குஷ்பு பேட்டி என்று கூறியுள்ளார்.

பிரபல ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்த குஷ்பு ’அரசியல் வேறு, நட்பு வேறு என்றும், இரண்டையும் கலக்க கூடாது என்றும், நான் கமல்ஹாசன் அவர்களை அரசியல் ரீதியாக இதுவரை விமர்சித்தது கிடையாது என்று, இனிமேலும் விமர்சிக்க மாட்டேன் என்றும் கூறினார். மேலும் கோவை தெற்கு தொகுதியில் கமலஹாசனை எதிர்த்து போட்டியிட்ட வானதி வெற்றி பெற்றது எனக்கு சந்தோஷம் என்றும் ஆனால் அதே நேரத்தில் கமல்ஹாசன் டஃப் ஃபைட் கொடுத்திருக்கிறார் என்பதால் அவரை பாராட்டுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் 25 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் ’அண்ணாத்த’ படத்தில் நடிப்பது குறித்து கூறிய குஷ்பூ ’அவருடன் பணிபுரியும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது என்றும் அவர் இந்த 28 வருடத்தில் மாறியிருப்பார் என்று நினைத்திருந்தேன் என்றும் ஆனால் 28 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தாரோ அதே போல் தான் இன்னும் இருக்கிறார் என்றும், ஷாட் முடிந்ததும் அவர் கேரவனுக்கு செல்வது கிடையாது என்றும் தெரிவித்தார்.

மேலும் ஆரம்பத்தில் நானும் மீனாவும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டு இருந்தோம் என்றும் ஆனால் அவரே எங்களிடம் வந்து ’என்னை தனியாக விட்டுட்டீங்க, என்னிடம் பேச கூடாதா? என்று கேட்டார் என்றும் அதற்கு நாங்கள் ’உங்களை தொந்தரவு பண்ண கூடாது என்று நினைத்தோம்’ என்று கூறினோம் என்றும் அதன் பிறகு நாங்கள் மூவரும் பழைய கதைகளை பேசினோம் என்றும் குஷ்பு ’அண்ணாத்த’ பட அனுபவம் குறித்து கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment