சுயநலவாதிகள்.. விவாகரத்து செய்பவர்கள் குறித்து நடிகை குஷ்புவின் சாட்டையடி பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
திரை உலகில் விவாகரத்து செய்யும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமீபகாலமாக தனுஷ், ஜிவி பிரகாஷ், ஜெயம் ரவி உள்ளிட்டோர் விவாகரத்திற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், "விவாகரத்து செய்பவர்கள் சுயநலவாதிகள்" என்று நடிகை குஷ்பு தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அவர் அந்த பதிவில் கூறியிருப்பதாவது:
"தன் குடும்பத்தை எல்லாவற்றிற்கும் மேல் மதித்து போற்றுபவன் தான் உன்னதமான மனிதன். தனது குடும்பத்தை நேசிக்கும் ஒருவனது தனிப்பட்ட தேவைகள் எல்லாம் இரண்டாம் பட்சமாகிவிடும்.
வாழ்க்கையின் முக்கியமான அங்கம் திருமணம். வாழ்வில் நிறைய மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும். தவறுகள் நடக்கத்தான் செய்யும். ஆனால், ஒரு மனிதன் தனது குடும்பத்தை பிரிவதற்கான உரிமையை இதனால் எடுத்துக் கொள்ளக்கூடாது. காலப்போக்கில் கணவன்-மனைவி இடையேயான பந்தத்தில் அன்பு குறையலாம், ஆனால் பரஸ்பர மரியாதை குறையக் கூடாது.
நம்முடைய குழந்தைகளை அன்போடு பார்த்துக் கொள்ளும் மனைவியை மதிப்பவன் தான் உண்மையான மனிதன். மனைவியை விட்டு செல்பவன் உன்னதமான மனிதன் இல்லை. தங்களது பிரிவால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறியாத சுயநலவாதிகள். மனித நேயம் இல்லாதவர்கள், சரியான புரிதல் இல்லாமல் தான் இதை செய்கிறார்கள்.
வாழ்க்கை என்பது ஒரு அழகான சுழற்சி சக்கரம். சுயநலத்தால் நீங்கள் செய்யும் தவறுகள் உங்களை மீண்டும் தாக்கலாம். நீங்கள் அதை உணரும் போது, காலம் கடந்து போயிருக்கும். இதுதான் உண்மை. உங்களுடைய குழந்தைகளுக்காக தாயாக இருக்கும் மனைவியை மதிப்பது, சிறப்பான குணம் மட்டுமன்றி அடிப்படையான குணம். இதை புரிந்து கொள்ளாதவர்கள் குறைந்தபட்சம் மரியாதையைக் கூட பெற முடியாது.
மனைவியை நேசிக்காமல் அவமதிப்பவர்கள் கொடூரமானவர்கள். அது மனைவியின் இதயத்தை நொறுங்க செய்யும். தன்னுடைய வாழ்க்கையில் முன்னேறி கொள்ள நினைக்கும் மனிதன் முதலில் தன்னுடைய குடும்பத்தை முன்னேற்ற வேண்டும். எல்லா நாளும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. பரஸ்பர மரியாதை இருக்கும் போது கடினமான காலத்தையும் நம்பிக்கையுடன் கடந்து செல்ல முடியும்.
உங்களின் உலகமே உங்கள் குடும்பம் தான். உங்களுக்கு என்றுமே உங்கள் குடும்பம் தான் ஆதரவளிக்கும். நண்பர்களை மதிப்பது நல்லது, ஆனால் அதே நேரத்தில் குடும்பம் முக்கியமானது. உங்கள் அன்பு, மரியாதை அனைத்தும் உங்கள் வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும். இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அன்பின் பாதையில் இருந்து விலகிச் செல்வார்கள்," என்று குஷ்பு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
A true man stands tall, putting his family above all else. His needs, whims, desires, and freedoms all come second to the ones who love him unconditionally. In the journey of life, every marriage faces its ups and downs, and yes, mistakes happen. But these missteps never grant a…
— KhushbuSundar (@khushsundar) September 21, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments