NO என்றால் NO தான்: நடிகைகள் பாலியல் தொல்லை குறித்து குஷ்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து நடிகை மற்றும் பாஜக பிரபலம் குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் நீண்ட பதிவை செய்துள்ளார்.
அந்த பதிவில் ’பெண்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று சென்று கொண்டிருக்கும்போது பாலியல் வன்கொடுமைகளை சந்திப்பது திரையுலகில் மட்டுமின்றி எல்லாத் துறைகளும் இருக்கின்றன பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் இந்த பிரச்சனை உள்ளது.
இது குறித்து எனது மகள்களுடன் நான் நீண்ட நேரம் உரையாடினேன், பாலியல் துன்புறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் உடனே சொன்னால் நியாயம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், இதை சொல்வதால் அவமானப்படுவோம் என்ற பயம் ஏன்? இவ்வளவு நாள் ஏன் சொல்லவில்லை என்ற கேள்விகள் சம்பந்தப்பட்டவர்களை காயப்படுத்தலாம். ஆனால் அதே நேரத்தில் அவர்கள் சொல்வதை கேட்க காதுகள் தேவைப்படுகிறது.
அனைவரிடமிருந்து உணர்ச்சிகரமான ஆதரவு அவர்களுக்கு தேவைப்படுகிறது. ஒரு பெண்ணாகவும் தாயாகவும் இந்த வன்முறைகளால் காயப்பட்ட பெண்கள் பெரும் சிக்கலை சந்திக்கின்றனர். என் தந்தை எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து பேசுவதற்கு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டீர்கள் என்று என்னிடமே சிலர் கேட்கிறார்கள். நான் முன்னரே இந்த விஷயத்தை பற்றி பேசி இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
ஆண்கள் பெண்களை மதிக்க வேண்டும், பெண்கள் வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் ஆண்களும் ஈடுபட வேண்டும், ஆண்களும் குரல் கொடுக்க வேண்டும். துன்பங்கள் அனுபவித்த பெண்களுடன் நான் நிற்கிறேன், ஒரு தாயாகவும் ஒரு பெண்ணாகவும்.
இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது பல பெண்களுக்கு அவர்களுடைய குடும்பத்தில் இருந்து கூட ஆதரவு கிடைப்பதில்லை. இந்த கொடூரம் இதோடு கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து பேச வேண்டும். வாழ்க்கையில் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், NO என்றால் அது கண்டிப்பாக NO என தான் இருக்க வேண்டும். உங்கள் கண்ணியம் மரியாதையை ஒருபோதும் சமரசம் செய்யவேண்டாம் ’ என்று பதிவு செய்துள்ளார். குஷ்புவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
💔 This moment of #MeToo prevailing in our industry breaks you. Kudos to the women who have stood their ground and emerged victorious. ✊ The #HemaCommittee was much needed to break the abuse. But will it?
— KhushbuSundar (@khushsundar) August 28, 2024
Abuse, asking for sexual favors, and expecting women to compromise to…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments