என் இதயம் எப்போதும் பிரபுவுக்காக துடிக்கும்.. 32வது வருடத்தில் குஷ்புவின் நெகிழ்ச்சி பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபு, குஷ்பு நடித்த ’சின்னத்தம்பி’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 32 வருடங்கள் ஆனதை அடுத்து இந்த படம் குறித்து நெகிழ்ச்சியான தனது கருத்தை நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
பி வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு நடிப்பில், இளையராஜா இசையில் உருவான திரைப்படம் ’சின்னத்தம்பி’. கடந்த 1991 ஆம் வருடம் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியான இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது இந்த படத்தின் வசூல் மிகப்பெரிய சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற பிரபு, குஷ்புவின் கெமிஸ்ட்ரி, இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் ஆகியவை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில் சின்னத்தம்பி திரைப்படம் வெளியாகி இன்றோடு 32 ஆண்டுகள் ஆனதை அடுத்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு செய்துள்ளார். சின்னத்தம்பி, தமிழ் சினிமாவில் புயலை கிளப்பி 32 வருடங்கள் ஆகிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. என் மீது பொழிந்த அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். என் இதயம் எப்போதும் வாசு மற்றும் பிரபு ஆகியோருக்காக துடிக்கும். இளையராஜா அவர்களின் ஆன்மாவை கிளர்ந்தெழுக செய்த இசைக்காக என்றும் அவரை மறக்கவே முடியாது. இந்த படத்தை தயாரித்த மறைந்த தயாரிப்பாளருக்கு பாலு அவர்களுக்கு எனது நன்றி.
சின்னத்தம்பி படத்தில் எனது நந்தினியின் கேரக்டர் அனைவரின் இதயங்களிலும் மனங்களிலும் என்றென்றும் பதிந்து உள்ளது. அதற்காக மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.
Just can't believe it's been 32 yrs since #ChinnaThambi took tamil cinema by storm. Will always be indebted for the love showered upon me. My heart will always beat for #PVasu Sir & #Prabhu Sir. Forever grateful to #Illaiyaraja Sir for his soul stirring music n Late #KBalu for… pic.twitter.com/EDxxKwnDaN
— KhushbuSundar (@khushsundar) April 12, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments