குஷ்புவிடம் சிக்கி சின்னாபின்னாமான அந்த குமாரு யாரு?

  • IndiaGlitz, [Monday,January 08 2018]

சமூகவலைத்தளங்களின் ஆக்டிவ் ஆக இருக்கும் ஒருசில நடிகைகளில் குஷ்புவும் ஒருவர். தினமும் காலை வணக்கம், ஒரு பொன்மொழி சொல்வது முதல் அரசியல், சினிமா மற்றும் சமூக கருத்துக்கள் வரை குஷ்புவின் சமூக வலைத்தள பக்கத்தில் இடம்பெறும் என்பதால் அவருக்கு ஃபாலோயர்களும் குவிந்துள்ளது.

இந்த நிலையில் குஷ்புவையே ஆத்திரப்பட வைத்துள்ளார் ஒரு மர்ம மனிதர். சமீபத்தில் குஷ்பு, ஒருத்தன் ரொம்ப படுத்துறான்..டேய் நீ தலை கீழே நின்னாலும் நீ ஒரு லூசுதான்...வாழ்க்கையிலே ஜெயிக்கிறதுக்கு 'தீயா வேலை செய்யணும் 'குமாரு'...வெறும் ஜால்ரா அடிச்சு கூஜா தூக்குனா நீ வெளங்குன மாதிரிதான்...போடா.. ஏதாவது வேலை பாரு...சும்மா கிடக்கும் மனது சாத்தானின் பட்டறை என டுவீட் செய்துள்ளார்.

குஷ்பு யாரை திட்டுகிறார், குஷ்புவிடம் சிக்கி சின்னாபின்னமான அந்த குமாரு யாரு என நெட்டிசன்கள் கடந்த சில மணி நேரமாக குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து குஷ்பு கூறியபோது, 'அந்த லூசு ஆளு பற்றி சொல்லும் அளவுக்கு வொர்த் இல்லை. சும்மா கிடக்கும் மனது சாத்தானின் பட்டறை என்று நான் சொன்னது அந்த ஆளுக்கு புரிந்திருக்கும்' என்று கூறியுள்ளார்.அந்த குமாரு யார் என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா? முடிந்தால் கமெண்ட் பாக்ஸில் குறிப்பிடுங்கள்