வைரமுத்து-சின்மயி விவகாரம் குறித்து குஷ்பு கூறியது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய குற்றச்சாட்டுக்கள் தமிழ் திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகை குஷ்பு செய்தி தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியில் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
சின்மயி தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து பேசியதை தவறு என்று நான் சொல்ல மாட்டேன். அதேபோல் அவர் இத்தனை வருடங்கள் கழித்து பேசியதும் தவறு இல்லை. இத்தனை வருடங்களுக்கு பின்னராவது அவர் தைரியமாக பேசியதை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஆனால் அதே நேரத்தில் இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க வைரமுத்து அவர்களுக்கும் அவகாசம் அளித்து அவர் என்ன பதிலளிக்கவுள்ளார் என்பதை தெரிந்து கொண்ட பின்னரே இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வர முடியும்
நான் திமுகவில் இருந்தபோதும் சரி, திரையுலகை பொருத்தவரையிலும் சரி, என் வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில், வைரமுத்து கண்ணியமான மனிதர்களுள் ஒருவர். அவர் ஒருநாள் கூட கலைஞர் கருணாநிதியின் நணபர் என கூறி எந்தவித மிரட்டலும், அத்துமீறலையும் செய்தது இல்லை' என்று குஷ்பு கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments