ஜெயலலிதாவை விட தினகரன் சிறந்த அரசியல்வாதியா? குஷ்பு

  • IndiaGlitz, [Tuesday,December 26 2017]

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெற்றுள்ளது பல அரசியல் கட்சிகளையும், அரசியல் தலைவர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு பணம் ஒரு பிரதான காரணமாக கூறப்பட்டாலும், ஜெயலலிதாவை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் பெற்றுள்ள வெற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறுகையில், ஜெயலலிதாவை விட டிடிவி தினகரன் சிறந்த அரசியல்வாதி கிடையாது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுக்கு, ஆட்சியின் மீதான அதிருப்தியே காரணம். ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஜெயலலிதாவிற்கு செய்த துரோகத்தால் தான், தினகரன் வெற்றி பெற்றுள்ளார்

மேலும் ஆர்.கே.நகரில் தினகரனுக்கு இவ்வளவு வாக்குகள் கிடைத்தது எப்படி? பணம் கொடுத்துதான் தினகரன் வெற்றி பெற்றுள்ளார். பணம் எந்தளவிற்கு பாயும் என்பதையே ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் காட்டியுள்ளது. பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் ஆர்.கே.நகர் தொகுதியை தவிர வேறு எந்த தொகுதியிலும் தினகரன் வெல்வாரா என்பது சந்தேகமே?

அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதே தினகரனின் குறிக்கோள். அது நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

More News

ரிலையன்ஸ் ஜியோவின் புத்தாண்டு சலுகை அறிவிப்பு

தொலைத்தொடர்பு துறையில் அறிமுகமான சில மாதங்களிலேயே புதிய புரட்சி செய்த ரிலையன்ஸ் ஜியோ, அவ்வப்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது.

4 நாட்களில் ரூ.40 கோடி: வேலைக்காரனின் அபார வசூல்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' திரைப்படம் கடந்த 22ஆம் தேதி வெளியாகி ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. 

முதலமைச்சர் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தியின் சர்ச்சை விமர்சனம்: அதிமுகவினர் கொந்தளிப்பு

பிரபல எழுத்தாளர், நடிகர், அரசியல் விமர்சகர்  சோ அவர்களின் மறைவிற்கு பின்னர் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றி வரும் ஆடிட்டர் குருமூர்த்தி,

மக்கள் வேணுமா? காசு வேணுமா? அதிமுகவினர்களுக்கு நடிகர் செந்தில் கேள்வி

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு அபார வெற்றி பெற்ற டிடிவி தினகரன் அணிக்கு பெரும்பாலான அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்கள் விரைவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் என்ன சிறுபிள்ளை விளையாட்டா? ரஜினியெல்லாம் வரமுடியாது: நாஞ்சில் சம்பத்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றைய ரசிகர்களின் சந்திப்பின்போது வரும் 31ஆம் தேதி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கவிருப்பதாக கூறியுள்ளார்.