நிஜத்தில் நடந்த சுந்தர் சி படத்தின் காமெடி: குஷ்புவின் ரியாக்சன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சுந்தர் சி இயக்கிய ’கலகலப்பு’ என்ற திரைப்படத்தில் மிர்ச்சி சிவா ஒரு வீட்டில் திருடியவுடன் சுவரில் இருந்த ஓட்டை வழியாக வெளியேறும் போது மாட்டிக் கொள்வார். இந்த காமெடி விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் இருந்த நிலையில் இந்த காமெடி உண்மையாகவே ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் என்ற பகுதியில் உள்ள ஒரு கோவிலில் 35 வயதான ரீசு பாபா ராவ் என்ற திருடன் கோவிலில் உள்ள நகைகளை திருடுவதற்காக கோவிலின் பின்னால் வைக்கப்பட்டிருந்த செங்கல்களை அகற்றிவிட்டு உள்ளே நுழைந்துள்ளான். அந்த திருடன் சாமிக்கு போடப்பட்டிருந்த ஆபரணங்களை திருடியபின் கோவிலின் சுவரில் இருந்த ஓட்டை வழியாக வெளியே வர முயற்சித்த போது ஓட்டையில் மாட்டி கொண்டதாக தெரிகிறது .
இரண்டு மணி நேரத்துக்கு மேலாக ஓட்டையில் சிக்கிய அந்த அந்தத் திருடன் ஒரு கட்டத்தில் கத்த ஆரம்பிக்க அக்கம்பக்கத்தினர் வந்து அந்த திருடனை மீட்டனர். பின்னர் அந்த திருடன் காவல் துறையில் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து போலீசார் அவனிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இதுகுறித்து தனது ரியாக்ஷனை நடிகை குஷ்பு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Hahahaha https://t.co/Lmuvh9TOUa
— KhushbuSundar (@khushsundar) April 6, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com