குஷ்பு அம்மாவை பார்த்துள்ளீர்களா? வைரல் புகைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் கடந்த 90கள் மற்றும் 2000களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு என்பதும் தற்போது அவர் பாஜக பிரமுகராக உள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நடிகை குஷ்பு தனது சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவ்வப்போது தான் நடிக்கும் திரைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்கள், அரசியல் கருத்துகளையும் பதிவு செய்து வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் அவர் தனது தாயாரின் 78வது பிறந்த நாளை அடுத்த தாயாருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். குஷ்புவின் தாயாரை இதுவரை பெரும்பாலான சிகர்கள் பார்த்ததில்லை என்ற நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் குஷ்புவின் தாயாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த பதிவில் குஷ்பு கூறிய போதும், ‘உண்மையாகவே கடவுள் அனுப்பிய ஒருவர் என்றால் அது அம்மா மட்டுமே. அவருக்கு மாற்றாக இந்த உலகில் யாருமே இல்லை. நான் சந்தித்த மிக அழகானவர் எனது அம்மா தான். இன்று தனது 78 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் அம்மாவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு, இரக்கம், மனிதாபிமானம், கருணை ஆகியவற்றின் மொத்த உருவமான அம்மாவை எனக்கு கொடுத்த கடவுளுக்கு நான் நன்றி கூறுகிறேன். வாழ்த்துக்கள் அம்மா! என்று தெரிவித்துள்ளார். குஷ்புவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Mother!! Truly God sent. Everything is replaceable but a mother. My Ammi is my the most beautiful woman I have ever met. As she celebrates her 78th birthday today, I thank Allah for giving me a messenger of love,compassion,empathy,humanity n grace. HAPPY BIRTHDAY AMMI! ❤️✨️?? pic.twitter.com/hodgZh6W2D
— KhushbuSundar (@khushsundar) May 3, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments