'அவர் இன்னும் குழந்தை தான்': பிரபல இயக்குனரின் 40 வயது மகன் குறித்து குஷ்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனரின் மகன் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த நடிகை குஷ்பு அவர் இன்னும் குழந்தை தான் என்று கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பி வாசு என்பதும் அவரது மகன் சக்தி வாசு நடிகர் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பதும் தெரிந்ததே.
40 வயதான இவர் தற்போது தாடி மீசையுடன் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன் இருந்த பி வாசு போல காணப்படுகிறார். அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவில் ’நீங்கள் சிறு வயதில் பார்த்த ஒருவரை மீண்டும் நீண்ட காலம் கழித்து சந்திக்கும் போது அதே குழந்தையை பார்த்தது போலவே இருக்கும். அந்த வகையில் சக்தி வாசுவை நான் நீண்ட காலத்திற்கு பின் பார்க்கும் போது நம்பிக்கையோடு மகிழ்ச்சியோடும் பார்த்தேன். அவரை பார்த்ததும் தனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது. இன்னும் அவர் சிறு குழந்தை போகவே இருக்கிறார்’ என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ரசிகர்கள் கமெண்ட்களில் பி வாசுவை போலவே அப்படியே இருக்கிறார் என்று பதிவு செய்து வருகின்றனர்.
பி வாசு இயக்கத்தில் பிரபு, குஷ்பு நடித்த ‘சின்னத்தம்பி’ படத்தில் சக்தி வாசு குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments