வெளிநாட்டு பயணத்திற்கு அனுமதி கேட்டு குஷ்பு நீதிமன்றத்தில் மனு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகையும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு மதுரை ஐகோர்ட்டில் தனக்கு வெளிநாட்டுக்கு செல்ல அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் பிரச்சாரம் செய்தேன். அப்போது தேர்தல் விதிகளை மீறியதாக ஆண்டிபட்டி போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு ஐகோர்ட் தடை விதித்தது.
தற்போது இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால், பாஸ்போர்ட் புதுப்பித்துத்தர மறுக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழ்க்கில் நான் வெளிநாடு செல்லும் போது எந்த நாட்டுக்கு செல்கிறேன், எங்கு தயங்குறேன் என்று தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்தநிலையில் நான் குடும்பத்துடன் வருகிற 24–ம் தேதி முதல் மாதம் மே 14–ந்தேதி வரை பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா செல்கிறேன். எனவே, நான் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு குஷ்புவின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் குஷ்பு வெளிநாடு செல்ல அனுமதி கிடைக்குமா? என்பது விரைவில் தெரியவரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com