ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நடிகை குஷ்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாஜக வேட்பாளராக ஆயிரம் விளக்கு தொகுதியில் களம் காணும் நடிகை குஷ்பு தற்போது தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதிலும் ஒவ்வொரு வீதியிலும் அவர் நடந்து சென்றே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதோடு அவர் சிறுபான்மையின மக்களிடம் அன்போடும் ஆதரவோடும் நடந்து கொள்ளும் விதம் குறித்து பலரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இப்படி வாக்குச் சேகரிக்கும் நடிகை குஷ்புவிற்கு செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் ஆரத்தி எடுப்பதும் அத்தொகுதியில் அதிகரித்து இருக்கிறது. மேலும் திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் அவர் தாமரையை மலரச் செய்தே தீருவேன் எனக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது பலருக்கும் உற்சாகத்தை அளித்து இருப்பதாக பாஜக தொண்டர்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.
மேலும் நடிகை குஷ்பு ஒரு நடிகை, ஒரு எம்எல்ஏ வேட்பாளர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் நடந்து கொள்வதாகவும் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். ஒவ்வொரு வீதியாக இறங்கி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கும் நடிகை குஷ்புவின் இந்த குணம் அவரை வெற்றிக் கட்டிலில் உறுதியாக அமர வைக்கும் என்றே பாஜக தொண்டர்கள் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பொதுவா சினிமா பிரபலங்களைப் பார்த்தாலே மக்கள் போட்டோவிற்கு போஸ் கொடுப்பவர்கள் என நினைத்து கொண்டு இருக்கும் இந்தச் சூழலில் நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் இருக்கும் பிரச்சனைகளை கேட்டறிவது, வாக்காளர்களுக்கு தேவையானது எனது என அக்கறையோடு விசாரிப்பது என அவர்கள் மத்தியில் ஒரு மதிப்பு மிக்க வேட்பாளராக அறியப்படுவதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com