ஆயிரம் விளக்கில் தொகுதியில் அசர வைக்கும் குஷ்புவின் பிரச்சாரம்!

  • IndiaGlitz, [Tuesday,March 30 2021]

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் குஷ்புவின் பிரச்சார பாணியே வித்தியாசமாக இருப்பதை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அசந்து போய் உள்ளனர்.

பொதுவாக தேர்தலில் போட்டியிடும் ஆளுங்கட்சி வேட்பாளராக இருந்தால் எதிர்க்கட்சிகளை குறை கூறுவதும் எதிர்க்கட்சி வேட்பாளராக இருந்தால் ஆளுங்கட்சியை குறைகூறி பிரச்சாரம் செய்தும் வருவார்கள்

ஆனால் குஷ்புவின் பாணியோ தனி பாணி. எதிர்க்கட்சி வேட்பாளர் குறித்து அவர் ஒரு வார்த்தை கூட பேசாமல் உங்கள் சகோதரிக்கு வாய்ப்பு தாருங்கள், உங்கள் தொகுதியில் உள்ள பிரச்சனைகளை நான் தீர்த்து தருகிறேன் என்று மட்டும் கூறி வாய்ப்புக் கேட்கிறார்

மேலும் பெண்களை கவரும் வகையில் அவர் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார் என்பதும், ஆயிரம்விளக்கு தொகுதியில் உள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஏற்கனவே தெரிந்து கொண்டு அந்த பிரச்சினைகளை மக்களிடம் பேசி அந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன் என்று உத்தரவாதம் தருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆயிரம் விளக்கு தொகுதிக்காகவே அவர் தனியாக ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதும் இந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அனைத்தையும் நிறைவேற்ற மாநில அரசிடம் போராடுவேன் என்றும் மாநில அரசு நிறைவேற்றவில்லை என்றால் தனது சொந்த பணத்தில் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று கூறியுள்ளார்

ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த தொகுதியில் பிரச்சாரம் செய்தபோது குஷ்புவுக்கு மத்திய அரசில் செல்வாக்கு இருப்பதால் அவர் தனது தொகுதியின் பிரச்சினைகளை நேரடியாக மத்திய அரசிடம் கூறி நிதி கேட்பார் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.