குஷ்புவின் கண்ணில் ஏற்பட்ட திடீர் காயம்: வைரலாகும் புகைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு, சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் தனது கருத்துக்களை தைரியமாக தெரிவிப்பவர் என்ற பெயர் எடுத்தவர் என்பதும் தெரிந்ததே. சமீபத்தில் கூட அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் அமித்ஷா, விரைவில் குணமாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது என்றாலும் அதற்கு அவர், தனது தரப்பு விளக்கத்தை தைரியமாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குஷ்பு தனது கண்ணில் காயம் ஏற்பட்டதாகவும் இன்று காலை எதிர்பாராதவிதமாக கண்ணில் கத்தியால் காயமேற்பட்டதாகவும் குறிப்பிட்டு, கண்ணில் கட்டுடன் கூடிய புகைப்படம் ஒன்றையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குஷ்புவின் காயம் பட்ட இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் தான் விரைவில் இந்த காயத்தில் இருந்து மீள்வேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொரோனா காலத்தில் அனைவரும் மாஸ்க் அணிந்து கவனமாக இருங்கள் என்றும் அவர் அந்த டுவிட்டில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hi friends, will be inactive for a while as I had to go under a knife for my eye this morning.. promise to be back soon. Take care, wear a mask if heading out and maintain a distance. ❤ pic.twitter.com/K7d5plvsym
— KhushbuSundar ❤️ (@khushsundar) August 19, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout