'அரண்மனை 5' போஸ்டர் வைரல்.. குஷ்பு கொடுத்த விளக்கம்..!

  • IndiaGlitz, [Saturday,October 26 2024]

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை’ படத்தின் நான்காம் பாகம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது.

அரண்மனை 4’ வெற்றி பெற்றால் ’அரண்மனை 5’ கண்டிப்பாக இயக்குவேன் என ஏற்கனவே சுந்தர் சி கூறியிருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ’அரண்மனை 5’ படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இந்த போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியானதா என ரசிகர்களுக்கு சந்தேகம் இருந்த நிலையில், தற்போது குஷ்பு இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

’அரண்மனை’ படத்தின் தொடர்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் ஐந்தாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த சில நாட்களாக பல்வேறு செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும், இது குறித்த புகைப்படங்கள், நட்சத்திரங்களின் பட்டியல், ப்ரஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவை அதிகாரப்பூர்வமானவை அல்ல. மேலும் ’அரண்மனை 5’ குறித்த எந்த வியாபாரம் யாருடன் செய்தாலும், அது அவர்களுடைய சொந்த ரிஸ்க். சுந்தர் சி மற்றும் அவ்னி சினி மேக்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்தால் மட்டுமே ’அரண்மனை 5’ உருவாகும்.

தற்போது நாங்கள் ‘கேங்கர்ஸ்’ படத்தில் தான் முழு கவனத்தை செலுத்தி வருகிறோம். விரைவில் அந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிடுவோம்’ என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்.

More News

5 பெண் போட்டியாளர்களில் நாமினேஷனில் இருந்து தப்பியது யார்? ஆழ்ந்த ஆலோசனை..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்கில் பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் நாமினேஷனில் உள்ள பெண்களில் ஒருவரை காப்பாற்றுமாறு

உலகமே உற்று நோக்கும் வகையில் வெற்றியை கொண்டாடுவோம்: தொண்டர்களுக்கு விஜய் கடிதம்..!

விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில்  நடைபெறவிருக்கும் நிலையில் தொண்டர்களுக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.  இந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நூல் விட்டே நாமினேஷன் ஃப்ரீ பாஸை பெற்ற பெண்கள் அணி.. வழக்கம் போல் சொதப்பிய ஆண்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று 19வது நாளுக்கான ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது

கேம்பிரிட்ஜ் பல்கலையில் படிக்க விருப்பப்படும் இளைஞர்.. ஜியோ ஹாட்ஸ்டார் டொமைன் உதவுமா?

ஜியோ மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள நிலையில், இதை முன்கூட்டியே கணித்த டெக் வல்லுனர் ஒருவர் ஜியோஹாட்ஸ்டார் டொமைனை வாங்கியிருப்பதாகவும்,

சிம்பு - அஸ்வத் மாரிமுத்து படத்தில் 'கோட்' நாயகியா? இயக்குனர் அளித்த விளக்கம்..!

சிம்பு நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் 'கோட்' படத்தின் நாயகி நாயகியாக நடிக்க போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி