எஸ்பிபி சார் கடவுள் மாதிரி: கண்கலங்கிய பிரபல நடிகையின் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்யாத திரையுலகினர்களே இல்லை என்று கூறலாம். அந்த வகையில் நடிகை குஷ்பு கண்கலங்கியவாறு எஸ்பிபி அவர்கள் மீண்டு வரவேண்டும் என்று கூறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
எஸ்.பி.பி சார், நம்முடைய தினசரி வாழ்வில் நம்முடனே இருக்கிறார். அவர் இல்லாமல் ஒரு வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியல. தினமும் கடவுளை கும்பிடுவதைப்போல் அவருடைய பாடல்களை கேட்காமல் யாராலும் இருக்கவே முடியாது. குறிப்பாக என்னால் இருக்க முடியாது. நான் காலை எழுந்தவுடனும், வேலை செய்யும்போதும், பயணத்தின்போதும், தூங்கும்போதும் அவருடைய பாடல்களைதான் கேட்கின்றேன். என்னைப் பொருத்தவரை அவர் தான் கடவுள் மாதிரி. கடவுளுக்கு சமமாக அவரை நான் பார்க்கிறேன்.
என்னை போல் இந்த உலகத்தில் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவர் திரும்பி வருவார் என காத்து கொண்டிருக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுவது அதிர்ச்சியாக இருந்தாலும் அவர் நிச்சயம் திரும்பி வருவார்.
எஸ்பிபி சார் எங்களுக்காக திரும்பி வாங்க, நீங்க வந்தவுடன் உங்களிடம் கற்று கொள்ள நிறைய இருக்கின்றது. உங்களை கட்டிப்பிடிக்க வேண்டும். உங்களை சந்தித்து பேச வேண்டும், உங்கள் குரலை கேட்க வேண்டும். அதற்காக காத்திருக்கின்றோம். நீங்கள் வருவீர்கள். நீங்கள் மன உறுதி உள்ளவர் அதனால் நிச்சயம் வருவீர்கள். வாங்க சார்’ என்று கண்கலங்கியவாறு குஷ்பு இந்த வீடியோவில் கூறியுள்ளார்.
#SPB My God. Wishing you a very speedy recovery.. come back hale n hearty soon. We are waiting for you. ????????????????????????❤️❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/Jkmfb9963q
— KhushbuSundar ❤️ (@khushsundar) August 16, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments