உண்மையிலேயே அவரை மிஸ் செய்கிறேன்: குஷ்புவின் நெகிழ்ச்சியான டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உண்மையிலேயே அவரை மிஸ் செய்கிறேன் என மறைந்த பிரபல நடிகர் குறித்து நடிகை குஷ்பு பதிவு செய்து உள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் இன்று அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு நடிகர்கள் தங்களது சமூக வலைதளத்தின் மூலம் சிவாஜிகணேசனின் புகழ் குறித்து பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை குஷ்பு, சிவாஜி கணேசன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில், ‘உலக சினிமா இதுவரை கண்டிராத தலை சிறந்த நடிகர்களில் ஒருவர் என்றும் இன்று அவரது நினைவு நாள் என்றும் கூறியுள்ளார்.
சிவாஜி கணேசன் நடிப்புக்கு ஒரு புதிய அர்த்தத்தையும் பரிணாமத்தையும் கொடுத்தார் என்றும் அவரது டயலாக் டெலிவரி மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மிகவும் அடக்கமான அன்பான ஒரு நபர் என்றும் அவரை உண்மையிலேயே நாங்கள் மிஸ் செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Remembering one of the greatest actors world cinema has ever witnessed on his death anniversary today. He gave a new meaning and dimension to acting and his dialogue delivery was to die for. A very humble and lovable person that he was, he is truly missed.????????????#SivajiGanesan pic.twitter.com/7zdFaNoCeS
— KhushbuSundar (@khushsundar) July 21, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout