'அம்மா அந்த படத்தை மட்டும் பார்க்காதீர்கள்': குஷ்புவை எச்சரித்த மகள்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
குஷ்புவின் இரண்டு மகள்கள் சமீபத்தில் ’அனிமல்’ படத்தை பார்த்து ’அம்மா நீங்கள் அந்த படத்தை பார்க்காதீர்கள்’ என்று சொன்னதாக குஷ்பு சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் திரையுலகில் சமீபத்தில் வெளியான ’அனிமல்’ திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதும் பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்தது என்பதும் விருதுகளையும் குவித்து வருகிறது என்பதையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை குஷ்பு ’அனிமல்’ படம் குறித்து சமீபத்தில் கூறிய போது ’அனிமல்’ பட இயக்குனரை நான் குறை கூற மாட்டேன், அவரைப் பொறுத்தவரை ஒரு திரைப்படத்தின் வெற்றிதான் முக்கியம், ஆனால் சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்களிடம் கேட்டால் நாங்கள் பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறோம், மக்கள் இந்த மாதிரி படத்தை விரும்புவதால் தான் எடுக்கிறோம் என்று கூறுவார்கள், எனவே மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
என் மகள்கள் இதுபோன்ற படத்தை பார்ப்பதை நான் விரும்பவில்லை, ஆனால் அந்த படம் எதைப் பற்றி பேசுகிறது என்பதை அவர்கள் அறிய விரும்பியதால் ’அனிமல்’ படத்தை பார்க்க நான் அனுமதித்தேன். அந்த படத்தை பார்த்துவிட்டு வந்து அம்மா தயவு செய்து அந்த படத்தை பார்க்காதீர்கள் என்று என்னை எச்சரித்தார்கள். இப்படிப்பட்ட படங்களை மக்கள் திரும்பத் திரும்ப போய் பார்த்துக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது’ என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments