close
Choose your channels

அடையாளம் தெரியாமல் மாறிப்போன குஷ்புவின் மகள்; ஹீரோயினிக்கு தயாரா?

Monday, September 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை குஷ்பு தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், குஷ்புவின் மகள் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி விட்டதாகவும் விரைவில் சினிமாவில் நடிக்க தயாராகி விட்டதாகவும் கூறி வருகின்றனர்.

கடந்த 80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் குஷ்பூ. கமல், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த குஷ்பு தற்போது சினிமா தயாரிப்பாளராகவும் அரசியல்வாதியாகவும் வருகிறார்.

இந்த நிலையில் குஷ்பூ - சுந்தர் தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என்ற 2 மகள்கள் உள்ளனர். குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா சினிமாவில் நடிக்க இருப்பதை அவர் லண்டனில் நடிப்பு பயிற்சி முடித்து சென்னை திரும்பியுள்ளார். விரைவில் அவர் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமாக இருக்கிறார். அதேபோல் குஷ்புவின் இளைய மகள் அனந்திகாவும் விரைவில் சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் குஷ்பு மட்டுமின்றி அவரது இரண்டு மகள்களும் உடல் எடையை குறைப்பதில் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர் என்பதும் தற்போது மூவருமே ஸ்லிம்மாக மாறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குஷ்பு தனது மூத்த மகள் அவந்திகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவந்திகாவின் முடி நிறம் மாறி ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் நிலையில் ஹீரோயினுக்கு அவர் தயாராகி விட்டதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment