குஷ்பு போட்டியிடும் தொகுதி அறிவிப்பு: கமலுக்கு எதிராக போட்டியிடுபவர் யார்?

  • IndiaGlitz, [Sunday,March 14 2021]

வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகை குஷ்பு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அதே தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சேப்பாக்கம் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை என்பதால் தற்போது குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சற்றுமுன் வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில் இந்த தகவல் உள்ளதை அடுத்து இந்த தொகுதியில் குஷ்பு வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் பாஜக வேட்பாளர் பட்டியலில் கோவை தெற்கு தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐபிஎஸ் பதவியிலிருந்து விலகி கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இணைந்த அண்ணாமலை, அரவக்குறிச்சி தொகுதியிலும், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தாராபுரம் தொகுதியிலும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது