அமைச்சர் பதவியேற்ற சக நடிகைக்கு வாழ்த்து கூறிய குஷ்பு!

  • IndiaGlitz, [Monday,April 11 2022]

தன்னுடன் நடித்த சக நடிகை அமைச்சர் பதவி ஏற்றதை அடுத்து அவருக்கு தனது வாழ்த்தினை சமூக வலைதளம் மூலம் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

கடந்த 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த நடிகைகள் குஷ்பு மற்றும் ரோஜா என்பது தெரிந்ததே. ‘கூடியிருந்தால் கோடி நன்மை’, ‘வீரம் வெளஞ்ச மண்ணு’ ஆகிய படங்கள் உள்பட ஒருசில படங்களில் ரோஜா மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ரோஜா கடந்த சில ஆண்டுகளாக ஆந்திர மாநிலத்தில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார் என்பதும் நகரி தொகுதியில் தொடர்ச்சியாக அவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இன்று அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் 14 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதில் ஒருவர் நடிகை ரோஜா என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இன்று அமைச்சர் பதவியை ஏற்ற பின்னர் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி காலில் விழுந்து ஆசி பெற்றார். இது குறித்த வீடியோவை தனது டுவிட்டரில் பதிவு செய்த நடிகை குஷ்பூ ’ஆந்திரப்பிரதேச அமைச்சராக பதவியேற்ற ரோஜா செல்வமணிக்கு வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.