இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் குஷ்பு: ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள் அமோக வரவேற்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் குஷ்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதும், இந்த கொரோனா காலத்தில் ஆண் வேட்பாளர்களே திறந்தவெளி ஜீப்பில் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் குஷ்பு நடந்தே சென்று ஒவ்வொரு பகுதியிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்
அதுமட்டுமின்றி ஒவ்வொரு பகுதியில் உள்ள மக்களின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்டு அவர்களுடைய பிரச்சனையை தீர்த்து வைப்பதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளார். குஷ்புவின் இந்த அணுகுமுறை அந்த பகுதி மக்களுக்கு பெரும் திருப்தியை அளித்துள்ளது. மேலும் இஸ்லாமிய பெண்களுக்கு அவர்களுடைய வீட்டிலேயே தொழில் செய்ய உதவி, பெண் குழந்தைகளுக்கு ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் என் கிட்டத்தட்ட ஒரு தனி தேர்தல் அறிக்கையே அவர் ஆயிரம் விளக்கு தொகுதிக்காக வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் அவர் இரண்டு மூன்று முறை விசிட் செய்து விட்டார் என்பதும் குறிப்பாக தேனாம்பேட்டை, திநகர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், ஆகிய பகுதிகளில் அவருடைய பிரசாரத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று இரவு ஏழு மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவதால் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது அவர் திறந்த ஜீப்பில் தொகுதி முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார். பொதுமக்களும் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் அவருக்கு வரவேற்பு கொடுத்து வருகின்றனர் என்பதும் இதனை அடுத்து அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டதாகவே அதிமுக-பாஜக கூட்டணியினர் தெரிவித்து வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com