33 வருட நண்பரான பிரபல நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய குஷ்பு

  • IndiaGlitz, [Saturday,May 30 2020]

கடந்த 1987ஆம் ஆண்டு வெளியான ’பருவராகம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் ரவிச்சந்திரன். அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’நாட்டுக்கு ஒரு நல்லவன்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்து அதில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பல கன்னட திரைப்படங்களில் நடித்து கன்னட சூப்பர் ஸ்டார்களில் ஒருவராகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ரவிச்சந்திரன் இன்று தனது 58வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கன்னட திரையுலகினர் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாட்டுக்கு ஒரு நல்லவன்’ திரைப்படத்தில் ரவிச்சந்திரனுடன் நடித்த நடிகை குஷ்பு தற்போது தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் ரவிச்சந்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

நடிகர் ரவிச்சந்திரன் கன்னட திரையுலகில் தனக்கு வழிகாட்டியாக இருந்ததாகவும் அவருக்கு தனது இனிமையான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குஷ்பு கூறியுள்ளார். மேலும் அவருடன் பழக ஆரம்பித்த இந்த 33 வருடங்களில் அவரிடம் எந்த ஒரு மாற்றத்தையும் பார்க்கவில்லை என்றும் அவர் மிகச்சிறந்த மனிதர் என்றும் குஷ்பு குறிப்பிட்டுள்ளார். குஷ்புவின் இந்த வாழ்த்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
 

More News

பீகாரில் தாய் இறந்தது கூட தெரியாமல் விளையாடிய குழந்தையை தத்தெடுத்த பிரபலம்

கடந்த சில நாட்களுக்கு முன் பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் வெளி மாநிலத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல ரயில் சென்று கொண்டிருந்தபோது

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அருண்விஜய்

பிரபல மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்தரன் அவர்கள் இயக்கிய 'நேரம்' மற்றும் 'பிரேமம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர்ஹிட் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

ஒரே நாளில் 938 பேர் கொரோனாவுக்கு பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து சுகாதாரத்துறை தினந்தோறும் அறிவித்து வரும் நிலையில்

மீம்ஸ் கிரியேட்டர்களின் தலைவர்: வடிவேலுவை பாராட்டிய பிரபல காமெடி நடிகர்

கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வெளிவந்து கொண்டிருப்பது தெரிந்ததே. நாட்டில் எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் அந்த சம்பவத்தை மையமாக வைத்து ஊடகங்கள் சீரியஸாக செய்திகளை வெளியிட்டு

கொரோனா எதிரொலி: சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிய வசதி

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வரும் ஜூன் 1 முதல் நிபந்தனைகளுடன் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது