சாம்பியன் ஆஃப் சாம்பியனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய குஷ்பு!

  • IndiaGlitz, [Wednesday,May 27 2020]

முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி இன்று தனது 58வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 1983ஆம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது இந்திய அணி வீரர்களில் ஒருவராக இருந்தவர் ரவிசாஸ்திரி. இவர் 80 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார் என்பதும், அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை வரை இவர் இந்த பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1985ஆம் ஆண்டு சாம்பியன் ஆப் தி சாம்பியன் என்ற விருது பெற்ற ரவிசாஸ்திரி இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். விராட் கோலி உள்பட பல கிரிக்கெட் வீரர்களும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் உள்பட ஒருசில ஐபிஎல் அணிகளும், பிசிசி, ஐசிசியும் ரவிசாஸ்திரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் சாம்பியன் ஆப் சாம்பியன் ரவிசாஸ்திரி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் அவர் மீது தனக்கு ஏராளமான அன்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரவி சாஸ்திரியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவு செய்தார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.