ஊடகத்திடம் திடீரென மன்னிப்பு கேட்ட குஷ்பு: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Tuesday,June 09 2020]

பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு, ஊடகங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஒரு ஆடியோ வைரலானதை அடுத்த இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளதோடு மன்னிப்பும் கேட்டுள்ளார். அந்த ஆடியோவில் ஊடகத்தில் இருப்பவர்களை ‘அவன் இவன்’ என்ற ஏக வசனத்தில் அவர் பேசியதாகவும், பத்திரிகையாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் பேசியதாக தெரிகிறது

இது குறித்து குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளிக்கையில், ‘நான் ஊடகங்களைப் பற்றிப் பேசியதாக ஒரு வாய்ஸ் மெசேஜ் சுற்றி வருகிறது. அது எடிட் செய்யப்பட்டது. அது எங்கள் தயாரிப்பாளர் குழுவிலிருந்து சென்றிருக்கிறது. எங்களுக்கு மத்தியில் இப்படி மலிவாக யோசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்து வெட்கப்படுகிறேன். எனது நோக்கம் தெளிவானது, ஊடகங்களை அவமதிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் பேசவில்லை. அது நண்பர்களிடம் நாம் பேசும் தொனிதான்.

ஊடகங்கள் மீதான என் மதிப்பு அனைவருக்கும் தெரியும. பத்திரிகையாளர்கள் (சிலர்) அதற்கு சாட்சி. திரைத்துறையில் இந்த 34 வருடங்களில் ஒரு முறை கூட நான் அவர்களிடமோ, அவர்களைப் பற்றியோ நான் மரியாதைக் குறைவாகப் பேசுவதை அவர்கள் பார்த்திருக்கவோ, கேட்டிருக்கவோ மாட்டார்கள். அந்த வாய்ஸ் மெசேஜ் அரைகுறையாக உள்ளது. ஆனால் உங்களில் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் யாருக்காக பணிபுரிகிறீர்களோ அவர்கள்தான் உங்களை முதுகில் குத்த முயல்கிறார்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். எந்தத் தயாரிப்பாளர் இதைச் செய்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ஆனால், யாரென்று நான் சொல்ல மாட்டேன். எனது அமைதியும், மன்னிப்புமே அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை. செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளன. நான் அதைத் தொடர்வேன்.

More News

கொரோனா தடுப்பூசி எப்போது சந்தைக்கு வரும்??? அமெரிக்கா, சீனா இடையே நிலவும் கடும் போட்டி!!!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் பல வல்லரசு நாடுகளே திணறிக் கொண்டிருக்கின்றன.

தென் கொரியாவுடன் இருக்கும் அனைத்துத் தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்படும்!!! காட்டத்தில் வட கொரியா!!!

உலகிலேயே மிகவும் மர்மமான நாடாகவும், சர்வதேச அளவில் அச்சுறுத்தும் நாடாகவும் கருதப்படும் வடகொரியா தற்போது தென் கொரியாவுடன் இருக்கும்

கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் மோசமாகி வருகிறது: எச்சரிக்கை விடுக்கும் WHO!!!

கொரோனா அறிகுறியே இல்லாதவர்கள் மற்றவர்களுக்கு நோயைப் பரப்பி வருகிறார்கள் என்று உலகச் சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கவலைத் தெரிவித்து உள்ளார்.

ஒவ்வொரு நாளும் உச்சமடையும் கொரோனா பாதிப்பு: என்ன ஆகும் தமிழகம்?

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருவதால் தமிழகம், குறிப்பாக சென்னை என்ன ஆகும் என்பதை நினைத்தாலே பெரும் அச்சமாக உள்ளது

'மாஸ்டர்' படத்தின் மாஸ் வீடியோவை வெளியிட்ட அனிருத்: ரசிகர்கள் குஷி

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.