கமல், அரவிந்தசாமியை அடுத்து சிம்புவை டார்கெட் செய்த குஷ்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு. ரசிகர்கள் இவருக்கு கோவில் கட்டும் அளவுக்கு வெறித்தனமாக இவரை ரசித்தனர். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வரும் குஷ்பு அரசியலிலும் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் தொலைகாட்சியில் 'சிம்ப்ளி குஷ்பு' என்ற பெயரில் திரையுலக பிரபலங்களை குஷ்பு பேட்டி எடுத்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, கமல் மற்றும் அரவிந்தசாமி ஆகிய முன்னணி நடிகர்களை குஷ்பு சுவாரசியமாக பேட்டி எடுத்தார். குறிப்பாக கமல்ஹாசனுடன் இவர் எடுத்த பேட்டியில் கமல் இதுவரை சொல்லாத பல விஷயங்களை சொல்லி நிகழ்ச்சியை மேலும் சுவையூட்டினார். காதல் காட்சிகளில் குறிப்பாக லிப் டு லிப் காட்சிகளில் நடிக்கும்போது தனக்கும் ஹீரோயினிக்கும் ஏற்படும் சங்கடங்கள் குறித்து கமல் கூறிய விஷயம் நகைச்சுவைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தற்போது சிம்புவை பேட்டி எடுத்துள்ளார் குஷ்பு. குஷ்புவின் இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த வாரங்களில் இன்னும் பிரபல நடிகர்கள் பேட்டி தரவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பேட்டி கொடுக்க வருபவர்கள் பெரும்பாலும் குஷ்புவுக்காக கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தகக்து.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com