'அரண்மனை 4' ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் குஷ்புவின் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை’ திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அதன் பின்னர் ’அரண்மனை 2’ ’அரண்மனை 3’ஆகிய படங்கள் வெளியாகி தற்போது முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் கழித்து ’அரண்மனை 4 ’பாகம் உருவாகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீஸ் க்கு பல மாதங்களுக்கு முன்பே தயாரான நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியானது.
இந்த நிலையில் சற்றுமுன் ’அரண்மனை 4’ படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு தனது சமூக வலைதளத்தை இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை குஷ்பு ஏப்ரல் மாதம் ரிலீஸ் என்று கூறியிருந்தாலும் சரியான ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அனேகமாக ஏப்ரல் 11ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக இந்த படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 26 ஆம் தேதி விஷால் நடித்த ’ரத்னம்’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையை இரண்டு வாரங்களுக்கு முன்பே ’அரண்மனை 4 ’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Get ready for the biggest entertainment of this summer🥳#Aranmanai4🏚️ is coming to you, this April 2024; for a rib-tickling & spine-chilling experience🔥
— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) March 27, 2024
A Film by #SundarC
A @hiphoptamizha Musical@khushsundar @AvniCinemax @benzzmedia @tamannaahspeaks #RaashiKhanna… pic.twitter.com/jWrVZZ2VTd
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments