'அரண்மனை 4' ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் குஷ்புவின் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,March 27 2024]

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை’ திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அதன் பின்னர் ’அரண்மனை 2’ ’அரண்மனை 3’ஆகிய படங்கள் வெளியாகி தற்போது முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் கழித்து ’அரண்மனை 4 ’பாகம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீஸ் க்கு பல மாதங்களுக்கு முன்பே தயாரான நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியானது.

இந்த நிலையில் சற்றுமுன் ’அரண்மனை 4’ படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு தனது சமூக வலைதளத்தை இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை குஷ்பு ஏப்ரல் மாதம் ரிலீஸ் என்று கூறியிருந்தாலும் சரியான ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அனேகமாக ஏப்ரல் 11ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக இந்த படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 26 ஆம் தேதி விஷால் நடித்த ’ரத்னம்’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையை இரண்டு வாரங்களுக்கு முன்பே ’அரண்மனை 4 ’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மீண்டும் தமிழில் களமிறங்கும் சமந்தா.. ஒரே ஒரு சின்ன நிபந்தனை தான்..!

நடிகை சமந்தா மயோசிட்டி என்ற நோயில் இருந்து குணமாகி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ள நிலையில் தற்போது அவர் 'சிட்டாடல்' என்ற வெப்தொடரில் நடித்து வருகிறார் என்பதை

21 வயது சிஎஸ்கே வீரருடன் 'பாக்கியலட்சுமி' நடிகை காதலா? இது என்ன புதுக் கதையா இருக்குது?

சிஎஸ்கே வீரருடன் 'பாக்கியலட்சுமி' சீரியலில் நடித்து வரும் நடிகைக்கு காதல் என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் இதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.

ஷங்கரின் அதே பிரமாண்டம்.. கலர்புல் காட்சிகள்.. 'கேம் சேஞ்சர்' பாடல் வீடியோ ரிலீஸ்..!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் தேஜா நடித்து வரும் 'கேம் சேஞ்சர்' மற்றும் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' ஆகிய இரண்டு படங்களையும் இயக்கி வரும் நிலையில் சற்றுமுன் 'கேம் சேஞ்சர்'

பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024 குரோதி வருடம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதை விளக்கியுள்ளார்.

பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் 2024 குரோதி வருடம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதை விளக்கியுள்ளார்.

அரசியலில் நான் கதிர் ஆனந்த் ஜூனியர்.. தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு..!

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர்.