நீங்கள் எல்லாம் மாறவே மாட்டீங்களடா? தைரியம் இருந்தா நேர்ல வா: குஷ்பு ஆவேசம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை குஷ்பு தனது சகோதரர் மரணம் குறித்து பதிவு செய்த டுவிட்டில் கிண்டலாக கமெண்ட் பதிவு செய்தவரை என்னுடைய செருப்பு சைஸ் 41 என்றும், தைரியம் இருந்தா நேர்ல வா, நீங்களெல்லாம் மாறவே மாட்டார்களா என ஆவேசமாக பதிவு செய்திருப்பது பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை குஷ்பு கடந்த சில நாட்களுக்கு முன் தனது சகோதரர் உயிருக்கு போராடி வருவதாகவும் அவருக்காக பிரார்த்தனை செய்யவும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு இரண்டு நாள் கழித்து தனது சகோதரர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டதாகவும் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த பதிவுக்கு நெட்டிசன் ஒருவர் கிண்டலாக கமெண்ட் செய்திருந்தார். ’அக்காவுக்கு சின்னத்தம்பி ஞாபகம் வந்துருச்சு’ என கிண்டலாக கூறியதை அடுத்து குஷ்பு அதை பார்த்து ஆவேசமடைந்து, ‘என்னுடைய செருப்பு சைஸ் 41. தைரியமிருந்தால் நேரில் வா. இதுதான் உங்க கீழ்த்தரமான புத்தி, நீங்கள் எல்லாம் மாறவே மாட்டீங்களாடா! நீ எல்லாம் கலைஞர் பாலோயர்ன்னு சொல்லிக்க வெட்கப்படனும்’ என்று சரமாரியாக பதிவு செய்துள்ளார். குஷ்புவின் இந்த ஆவேசத்தை பார்த்த அந்த நபர் தனது கமெண்ட்டை டெலிட் செய்து விட்டதாக தெரிகிறது.
Yen seruppu size 41. Dhairiyam irundha nerule vaa. Idhudhaan unga keezhthanamana budhdhi. Maarave maatingla da? Neeyalla #Kalaignar follower sollikku vekka padanum. @arivalayam this is your party member. Can they fall lower than this? https://t.co/VfLeJepUZa
— KhushbuSundar (@khushsundar) December 19, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments