'அரண்மனை 2' முதல் நாள் முதல் காட்சியில் குஷ்பு-த்ரிஷா

  • IndiaGlitz, [Saturday,January 30 2016]

சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா மற்றும் பலர் நடித்த 'அரண்மனை 2' திரைப்படம் ரிலீசாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக பொள்ளாச்சியில் 'கொடி' படப்பிடிப்பில் இருந்த நடிகை த்ரிஷா நேற்று சென்னை வந்துள்ளார்.


ரிலீஸுக்கு முன்பே 'அரண்மனை 2' திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்ததால், ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் இணைந்து இந்த படத்தை பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளதாக த்ரிஷா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படம் பல சிறப்பம்சங்களை பெற்றுள்ளதாக அவர் கூறினார். சுந்தர் சி இயக்கத்தில் தான் நடிக்கும் முதல் படம் என்றும், தான் நடிக்கும் முதல் பேய்ப்படம் என்றும் கூறிய த்ரிஷா, சித்தார்த்துடன் பத்து வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இந்த படத்தில் பேயாக நடிக்கும்போது கண்ணிமைக்காமல் பல காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது என்றும் இந்த காட்சிகள் தனக்கு பெரும் சவாலாக இருந்ததாகவும் த்ரிஷா கூறினார். மேலும் படம் பார்க்கும்போது ரசிகர்களின் கைதட்டல் தனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் ஹன்சிகா மிக அருமையாக நடித்துள்ளார் என்றும், அவருடைய கேரக்டர் படத்திற்கு பலம் வாய்ந்த கேரக்டர் என்றும் த்ரிஷா மேலும் கூறினார். சென்னை சத்யம் திரையரங்கில் இந்த படத்தை த்ரிஷா, தயாரிப்பாளர் குஷ்புவுடன் இணைந்து பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் ரசிகர்களுக்கு சவால் விடும் 'தெறி' டீசர்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் 50 வினாடிகள் டீசர் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது...

செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் 'புலி' நடிகை

சிம்பு நடிப்பில் செல்வராகவன் இயக்கி வந்த 'கான்' படம் டிராப் ஆனதை அடுத்து செல்வராகவன் இயக்கவுள்ள புதிய படமான ...

த்ரிஷாவுக்கு சிவகார்த்திகேயன் நன்றி கூறியது ஏன்?

கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா நடித்த 'அரண்மனை 2'...

'இறுதிச்சுற்று' படக்குழுவினர்களுக்கு ஒரு சந்தோஷ தகவல்

மாதவன், ரித்திகா சிங், நடிப்பில் சுதா இயக்கிய 'இறுதிச்சுற்று' திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது...

காதலும் கடந்து போகும்: விஜய்சேதுபதி-சமுத்திரக்கனி கேரக்டர்கள் குறித்த புதிய தகவல்

'சூது கவ்வும்' படத்தை அடுத்து நலன் குமாரசாமி இயக்கியுள்ள அடுத்த படம் 'காதலும் கடந்து போகும்', விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன்